கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத காரணங்களுடன் சமூக அரசியலையும் இலக்கியத்தையும் எதிர்கொள்ளும் நாம், அந்த எதிர்கொள்ளலில் எதிர்பாராத எல்லைகளைத் தொட்டுவிடுகிறோம். அப்படி அரசியலிலும் இலக்கியத்திலும் தம்மை தகவமைத்த ஆளுமைகளை யுகபாரதி இந்நூலில் அறியத் தந்திருக்கிறார். தோழர் நல்லக்கண்ணு, சுவரெழுத்து சுப்பையா, ஓமந்தூரார், எஸ்.பொன்னுத்துரை, பெரியார்தாசன், இளவேனில், சின்ன குத்தூசி, தேனுகா, வீர சந்தானம், தேனிசை செல் லப்பா, பொ.ஐங்கரநேசன், நாகூர் சலீம் ஆகியோர் பற்றிய விரிவான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், வாசகப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
மேலும், இந்நூலில் பிரத்யேகக் கட்டுரைகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன. சம்பவங்களை நூல்கோர்த்தாற் போல் சொல்லத் தெரிந்த யுகபாரதிக்கு, அச்சம்பவங்களின் பின்னணி அரசியலையும் தொட்டுக்காட்டத் தெரிந்திருக்கிறது. வாசிப்பின் வழியே அவர் வந்தடைந்துள்ள இடம், குறிப்பிட்ட அரசியலுக்குள் தம்மை குறுக்கிக்கொள்ளாத ஜனநாயத்தன்மையைத் தருவிக்கிறது. நல்லார் ஒருவர் என்பதில் முகாம்களின் அடையாளங்களைக் கடந்திருக்கிறார். அடையாளங்களை மட்டுமே, அடிப்படைகளை அல்ல.
Be the first to rate this book.