உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே என்பது திருமந்திரத்தில் திருமூலர் வாக்கு. இதை அடியொட்டி, உச்சந்தலை முதல் பாதம் வரை ஆரோக்கியத்துக்கான உணவின் அவசியத்தை மிகவும் சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் இந்த நூலின் 30 கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் அமுதகுமார்.
நல்ல உணவில் இருக்கும் சத்துக்கள், அதை கிரகிக்கும் உடலின் பாகங்களைப் பற்றிய குறிப்புகள், சத்து சேகரமாகும் விதம், கழிவாக வெளியேறும் விதம் என, நம் உடலுக்குள் நாமே சுற்றுலாப்பயணம் சென்றுவந்த உணர்வை இந்தப் புத்தகம் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தும்!
Be the first to rate this book.