நக்கீரரின் நடைப்பயணத்தில் நம் எல்லாரையும் பங்குகொள்ளச் செய்து நெடுநல்வாடையைப் புதிய கோணத்தில் படக்காட்சிகளுடன் விளக்கிய முனைவர் பாண்டியராஜாவுக்குப் பாராட்டு
-முனைவர் V.S.ராஜம், கணினி தமிழறிஞர், வட அமெரிக்கா
சங்க இலக்கியப்பாடல்களுக்குத் தங்களைப்போல் அறிவார்ந்த நோக்கில் புதிய கருத்துகளையும் படங்களையும் யாரும் இதுவரை தரவில்லை என்றே நினைக்கின்றேன்! நீங்கள் எழுதும் அழகுப்பாங்கும். அப்படியே அழைத்துப்போய் அந்தக் காலத்தில் நிகழ்ந்ததை அப்படியே காண்பது போல் இனிய நடையில் எழுதியிருப்பதையும் காண்கையில் நெஞ்சம் பெரிதும் இனிக்கின்றது ஐயன் வாழ்க வாழ்க உங்கள் தேனினிய பகிர்வுகள்.
-முனைவர் செ. இரா. செல்வக்குமார், மோள் பேராசிரியர் வாட்டர்லூ பல்கலைக்கழகம்,
தமிழ்மன்றம் தோற்றனர்,கனடா.
பேராசிரியர் பாண்டியராஜா அய்யா அவர்களின் வேறுபட்ட மற்றும் காலத்திற்கு ஏற்ற சிந்தனை வருங்கால சந்ததிகளுக்குத் தமிழில் உள்ள நல்ல பல வளங்களை வாரி வழங்கும். வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு ஐயா
-அண்ணா சுந்தரம், VAP Australia Pty Ltd ஆஸ்திரேலியா
சங்கத் தமிழ் செய்யுட்களையும் அவற்றின் உட்பொருளையும், அவை கூறும் அழகிய சிந்தனைகளையும் பேரா ப.பாண்டியராஜா தனக்கே உரிய எளிய நடையில் இந்த நூலில் வழங்கியிருக்கிறார். நக்கீரரோடு வாசகர்களையும் சுகமான நடைப்பயணத்தில் அழைத்துச் செல்கின்றார் நூலாசிரியர்.
-முனைவர் க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை ஜெர்மனி
Be the first to rate this book.