திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பேசும் விதத்தையும், நடக்கும் விதத்தையும், நடவடிக்கையையும் பார்க்கும்போது, "அது நான்தான்!" என்று, உங்களால் அந்தக் கதாபாத்திரத்தோடு உங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறதா? அந்த உணர்வுப் பிணைப்பை உருவாக்குவதுதான் நடிகரின் மகத்தான கலை என்கிறார் எட்வர்ட் ஜி. ராபின்சன்!
மைக்கேல் கெய்ன் சொல்வது போல, திரையில் நீங்கள் நடிகரை அல்ல; கதையில் உள்ள உண்மையான மனிதனையே பார்க்க வேண்டும். ஒரு நடிகரின் இறுதி இலக்கு: அவர் நடிக்கிறார் என்ற உணர்வைப் பார்வையாளருக்குத் தோன்றவிடாமல் கதாபாத்திரத்தின் நிஜத்தன்மையை நம்ப வைப்பது.
உள்ளிருந்து வெளியே (Stanislavski) அல்லது வெளியிலிருந்து உள்ளே (Outside Approach) – ஒரு நடிகர் எப்படித் தனது ஆளுமையை மறைத்து ஒரு புதிய மனிதனாக, ஒரு கதாபாத்திரமாக மாறுகிறார்? மேடை நடிப்பு 'ஆதிக்கம் செலுத்தும் கலை' என்றால், சினிமா நடிப்பு ஏன் 'கவர்ந்திழுக்கும் கலை' (Seduction) என்று அழைக்கப்படுகிறது? க்ளோஸ்-அப்களில் முகம் எப்படி வார்த்தைகளின்றி ஒரு வாழ்வின் அனுபவத்தைப் பதிவு செய்கிறது? போன்றவற்றை இப்புத்தகம் பதிவு செய்திருக்கிறது.
திரைப்படத்தின் முகங்களாக இருக்கும் இந்நடிப்பின் நுட்பங்களையும், ஒரு நடிகரின் முகபாவனைகள் முதல் உடல்மொழி வரை உள்ள ரகசியங்களையும் இப்புத்தகத்தின் வழி அறிந்துகொண்டு, உங்கள் சினிமா அனுபவத்தை ஆழப்படுத்துங்கள்!
Be the first to rate this book.