1993ல் நானும் கோணங்கியும் எழுத்தாளர் நடைபாதை இதயனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரது நாவலை வாங்குவதற்காக வேலூரில் அவரது வீடு தேடி அலைந்தோம். ஒருவருக்கும் அவரைப் பற்றித் தெரியவில்லை. அதன் பிறகு சென்னை பழைய புத்தகக் கடைகளில் அந்த நாவலைத் தேடி அலைந்திருக்கிறோம். இன்று வரை கண்ணில் படவேயில்லை. இந்தத் தொகுப்பில் விட்டல்ராவ் நடைபாதை இதயனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருடன் விட்டல்ராவிற்கு ஏற்பட்ட நட்பினையும் நினைவு கூர்ந்திருக்கிறார். மிக நல்ல கட்டுரை நடைபாதை என்ற நாவலை எழுதி விகடன் போட்டியில் முதல்பரிசு பெற்றவர் இதயன். இந்த நாவல் மும்பையில் சாலையோர கடைகள் நடத்தும் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கக்கூடியது. இதயனின் இயற்பெயர் குப்புசாமி. வேலூர் பெரிய அல்லாபுரத்தில் வசித்திருக்கிறார். கையில் காசில்லாமல் பிழைப்பு தேடி மும்பை சென்றவர் அங்கே சந்தித்த நடைபாதை வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார். சில ஆண்டுகள் இதயனும் நடைபாதைக் கடை நடத்தியிருக்கிறார். இளக்கலவரத்தில் இந்தக் கடை சூறையாடப்பட்டிருக்கிறது. இசையிலும் வாசிப்பிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தார் இதயன். அவரது சேமிப்பில் மிகச்சிறந்த இசைத்தட்டுகள் இருந்ததாக விட்டல்ராவ் எழுதுகிறார். ஆழ்வார்பேட்டை நியூ மைசூர் கபே மாடியில் ஒரு அறை எடுத்துத் தங்கி வாழ்த்திருக்கிறார்.
-எஸ்.ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.