அமரர் புதுமைப்பித்தன் நமக்கு அளித்துள்ள இலக்கியன் செல்வங்கள் பலவற்றில் நாரத ராமாயணம் இப்பொழுது முதன்முறையாக அச்சேறுகிறது. தமிழ் மக்களுக்கு ராம காதை புதிதல்ல. ஆனால் புதுமைப்பித்தன் அதனைப் புது நோக்குடன் எழுதியுள்ளார். ராம சரிதத்தின் பிற்பகுதியாக இந்தியச் சரிதத்தைப் பகைப்புலனாக வைத்து எழுந்துள்ள இந்நூல் சிந்தனைச் செல்வம் நிறைந்துள்ள ஒரு பொக்கிஷம். புதுமைப்பித்தனின் நடையும் அவரது பாத்திரங்களும் தமிழ் மக்களிடத்தில் ஒரு தனி மதிப்பைப் பெற்றுள்ளன. இந்நூலின் கைப்பிரதியைக் காப்பாற்றித் தந்த திருமதி கமலா விருத்தாசலம் அவர்களுக்கு எங்கள் நன்றி.
Be the first to rate this book.