வாழ்வு என்பது அலைவுதான். அந்த அலைவின் நினைவை எவராலும் மறக்க முடியாது. குறிப்பாக படைப்பாளிகளினால் அவற்றைக் கடந்து செல்ல முடியாது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களில் புலம்சார் விடயங்கள் தவிர்க்க முடியாதது. வாழ்வின் மிக முக்கிய தருணங்களை புலம்சார் நினைவுகள் சுமந்திருக்கின்றன. அதன் வலியை கடப்பதற்கும் நாம் எழுதியே ஆகவேண்டும். மறத்தலுக்கு எதிரான இயல்பான செயற்பாடு அது. புலம்பெயர் இலக்கியத்தை அணுகு பவர்களுக்கு அந்த புரிதல் மிக முக்கியமானது.
இதன் தொடர்ச்சியாகத்தான் இளங்கோவின் சிறுகதைகளையும் அணுக முடியும். ஏற்கனவே வெளிவந்த அவரின் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகளிலும் புலம், புலம்பெயர்வு குறித்த எம் வாழ்வின் அலைதலை தரிசிக்க முடியும். வாசிப்பும், தேடலும், அனுபவமும் இளங்கோவை சிறந்தவொரு கதை சொல்லியாகச் செப்பனிட்டிருக்கிறது. அதை அவரது கதைகளுக்கூடாக பயணித்தவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
-பா. அ.ஜயகரன்
Be the first to rate this book.