நவீன தமிழ்க் கவிதையை அதன் அதிகபட்ச சாத்தியக்கூறுகளுடன் கையாண்டு வருபவர் தபசி. உயர் அனுபவத்துடனும், தெளிவான பார்வையுடனும், சரியான மொழிப் புரிதலுடனும் கவிதை வடிப்பவர்களுள் பிரதான இடம் பிடிக்கிறார் அவர். எளிமையான அவர் கவிதைகள் அபாரமான கவித்துவத்தையும் தாங்கி நிற்பவை. சமகால வாழ்வை பேசும் அவர் கவிதைகள், வாழ்வின் தீராப் பொருட்களை நோக்கியும் கேள்வி எழுப்புகின்றன. நவீன கவிதை குறித்து அறிந்து கொள்ள விழைபவர்களும் சரி, கவிதையின் ஆழத்தை உணர்ந்தவர்களும் சரி, தபசியின் கவிதைகள் வாயிலாக புதிய உலகை கண்டடைவது உறுதி.
- கரிகாலன்
Be the first to rate this book.