இசையை ரசித்துவிட்டு இசையமைப்பாளரைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம். பாடலை ரசித்து விட்டு பாடலாசிரியனைக் கொண்டாடுவதில்லை. பழைய பாட்டென்றால் கண்ணதாசன்... அதற்குப் பிறகு வைரமுத்து... நடுநடுவே வாலி என்பதோடு மட்டும் நின்று விடுகிறது. ஆனால் பாடல் வரிகளைத் தோண்டியெடுத்துப் பார்க்கும் போதுதான், பலப்பல கவிஞர்கள் செய்திருந்த அதிசயங்கள் புரிந்தன. அந்தத் திரைப்படப் பாடல் வரிகளின் வழியாகக் கொஞ்சம் சினிமா, இலக்கியம், வரலாறு, பொழுதுபோக்கு, தகவல்... என்று குட்டிக் கட்டுரைகளாக எழுதியதுதான் நாலு வரி நோட்டு. திரைப்பாடல்களை ரசிப்பவர்களுக்கு இப்புத்தகம் வாசிப்பின்பம் தருமென்று நம்புகிறேன்.
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன்.வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க்கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ்.சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண்.
இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு'. சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', 'சுவீட் காரம் காப்பி'. புதினமாக 'காமரூபவல்லி' ஆகிய நூல்களை அளித்தவன்.
Be the first to rate this book.