நான் நம் நாட்டு ஏடுகளிலே படித்திருக்கின்றேன். நம் நாடு நன்செய்யாலும் புன்செய்யாலும் நாற்புறமும் சூழப்பட்ட தென்று நாடெங்கும் செந்நெல்லும் செங்கரும்பும் மற்றும் விளை பொருள்களும் மலிந்து கிடக்குமென்று ஆனால் ஊரிலே, நாட்டிலே, நகரிலே நாம் காணுவது நேர்மாறான காட்சிகள். படிப்பது பசிப்பிணி யறியா மக்கள் பார்ப்பது பசியால் மிக நொந்து மெலிந்து வாடி வதங்கும். பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகள். ஏட்டில் காண்பது கண்ணுக்கினிய காட்சி தரும் கூட கோபுர மாடமாளிகைகள் அலங்காரமான ஆபரண வகைகள். இன்ன பிறவற்றை இன்பம் நுகரும் மக்கள். ஆனால் கண்ணால் காண்பது காதால் கேட்பது யாவும் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கும் பரிதாப நிலைமை. நீர் நிலவளம் மிகுந்த செல்வமுடைத்தாய் சீர்பெற்றிலங்கும் நாடு என ஏட்டிலே நவிலப்படும் நாட்டிலே ஏன் இந்தத் தோற்றங்கள். எண்ண முடியாத ஏழைமக்கள், பசிக்கு உணவில்லாத பச்சிளம் குழந்தைகள் என்று கேட்கின்றேன்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.