அமெரிக்காவைப் பற்றிப் படிக்க ஆசைப்படுபவர்கள் அதைக் கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா? அல்லது கிறிஸ்டோபர் கொலம்பஸா? என்ற சந்தேகத்தில் இருக்கலாம்.
வெறும் பாய்மரங்களை வைத்தே, காற்றின் துணைகொண்டு,பெருங்கடலில் வீசிய பெரும் ஆபத்தான புயல்களையும் மீறி கண்டங்களில் கால்பதித்த ஐரோப்பிய மாலுமிகளின் வீர
சாகசக்கதைகளைக் கேட்பவர்களாக நீங்கள் இருக்கலாம்.
இந்தியாவின் மீது வியாபார ஆசை என்னும் வெறி கொண்டு கடல்வழி கண்டுபிடித்தவர்களால்தான், காலனி ஆதிக்கமே பரவியது என்ற வரலாற்றை நீங்கள் தேடிக் கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம்.
உலகையே சுற்றி வந்த மெக்கல்லன், தெய்வமாக பழங்குடியினருக்கு ஃவாஹிம் மாறிய ஜேம்ஸ் குக், கொலம்பஸிடமிருந்து கிரெடிட்டைத் திருடிய வெஸ்புகி, பார்வதி தேவியை கன்னி மரியாளாகக் கும்பிட்ட வாஸ்கோ டா காமா, இந்தியாவைக் கண்டுபிடிக்கப் போய் பிரேசிலைப் பார்த்த கேப்ரால், தான் பெயரிட்ட புயல் முனையிலேயே தன்னுயிரை இழந்த டயஸ் ..
இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தில் அவர்கள் செய்யும் பயணங்களில் கலந்து கொள்ளலாம்.
Be the first to rate this book.