'சூரியகாந்தி விதையின் கடினத் தோட்டினுள்ளே மடிந்து கொண்டிருக்கிறது சூரியன்' - என்பது போன்ற புதிரழகுமிகு கவிதைகளுக்குரியவர் யாங் லியான். சீனத்தின் மூடுபனி கவிஞர்களுள் முதன்மையானவர். அரசியல் காரணங்களால் நாடு நீங்கி, 34 ஆண்டுகள் தேசம் மாற்றி தேசம் என அலைந்து திரிந்து சர்வதேசக் கவிஞராக உருப்பெற்றவர். படிமத் தன்மையிலுமான அவருடைய கவிதைகளுக்கு அவ்வளவு எளிதில் விளக்கமோ விடையோ தந்துவிட முடியாது. கட்டுரைகளும், உரையாடல்களும் தேசம் கடந்த பார்வைகளின் பெரும் வெளிச்சம்.
Be the first to rate this book.