1. பட்டாம்பூச்சி விற்பவன்
2. நியூட்டனின் மூன்றாம் விதி
3. குழந்தைகள் நிறைந்த வீடு
4. அ’னா ஆவன்னா
5. என்னைச் சந்திக்க கனவில் வராதே
ஆகிய ஐந்து புத்தகங்களின் தொகுப்பு தான் இந்த நா. முத்துக்குமார் கவிதைகள்.
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார்.
திரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.