முத்துலிங்கத்தின் படைப்புகள் இதுகாறும் தமிழில் யாருமே எழுதாத நிலங்களில் பயணிக்கின்றன. யாருமே எழுதாத வாழ்க்கையைப் பேசுகின்றன....இந்த நூலில், முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுத்த 10 சிறுகதைகளின் ஊடாக நம்மை அவற்றுள் அழைத்துச் செல்கிறார் தில்லைநாயகம். இதற்கு நுழைவாயிலாக அமைந்திருக்கிறது 'சிறுகதைச் சிற்பி அமுத்துலிங்கம்' எனும் முதல் கட்டுரை. இந்தக் கட்டுரையில் நூலின் பேசு பொருளான 19 கதைகளை மட்டுமல்லாமல் அவரது எல்லாக் கதைகளையும் கட்டுரைகளையும் எடுத்துக்கொள்கிறார். புதிய வாசகர்களுக்குப் பரிந்துரைகளும் உண்டு.முத்துலிங்கத்தின் கதைகள் மணற்கேணியைப் போன்றவை. அதில் ஊறிவரும் நீரை தில்லைநாயகம் நமக்கு இறைத்துத் தருகிறார். அவர் ஒவ்வொரு முறை இறைக்கும்போதும் நீர் புதிதாக ஊறி வருகிறது.
மு.இராமனாதன்,
எழுத்தாளர்.
Be the first to rate this book.