இந்த நாடகப் பிரதியில் பல இடங்களில் சபாஷ் போட வைக்கும் யுக்திகள் உள்ளன. இன்றைய சமூக இன்னல்களை, கட்சி அரசியலின் கயமைகளை நினைவு கொள்ளும்படியான காட்சிச் சித்திரமாய், பிரமிக்க வைக்கும் நுண்ணரசியலைப் பின்னிச் செய்த பிரதியாக இது இருக்கிறது. சங்ககாலத்தைக் கண்முன் கொண்டுவந்து நம்மை அக்காலத்துக்கு அழைத்துச் செல்லும் டைம் மெஷின் போல இந்தப் பிரதியை வே.எழிலரசு செதுக்கியுள்ளார். மூன்று நாடகத்திலும் பெண்கள் அறிவாளிகளாக, வீராங்கனைகளாக, மொழிப்புலமை கொண்டவர்களாக வருவது சிறப்பான முன்னெடுப்பு, வரலாற்றில் ஒரு ஔவை இல்லை; நிறைய ஒளவைகள் இருந்தார்கள் என்ற செய்தியைக் கொண்டு, மூன்று நாடகத்திலும் அரூபப் பிணைப்பாக மூன்று ஔவைகள் வருவது நல்ல யுக்தி எனலாம். இந்த நாடகங்கள் மூலம் ஆசிரியர் வலியுறுத்துவது அறம் மட்டுமே. சாமான்யனாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் அறம் மீறினால் அழிவான் என்பதே.
– எழுத்தாளர் அமிர்தம் சூர்யான்
Be the first to rate this book.