விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் முதல் சபாநாயகராகவும் (1951-1955) சென்னை மாநகரத்தின் முதல் தந்தையாகவும் (1937-1938) மத்திய உறுப்பினராகவும் விளங்கிய தேர்வாணைக்குழு ஜெ. சிவசண்முகம் பிள்ளை (1901-1975) அவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த நவீன இந்தியாவின் முக்கியமான ஆளுமை. பெருந்தலைவர் எம்.சி. ராஜா. மூதறிஞர் ராஜாஜி. மகா மதுரகவி முருகேச பாகவதர், தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பெரியோர்களால் பாராட்டப்பட்டவர். அவரைப் பற்றி வெளிவரும் முன்னோடி முதல் நூல் இதுவாகும். இதனை மகா மதுரகவி முருகேச பாகவதரின் மகன் கவிஞர் எழிலிறைவன் எழுதியுள்ளார்.
'முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு வெளிவருவதற்குக் காரணமாக இருந்தவர் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் முருகு. சுந்தரேச. புனிதவதி அவர்கள். இவர் எம்பேரு சேமியா'. 'தாத்தாவின் வீடு' வாழ்த்துப்பா மலர்கள் (தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். தற்பொழுது தன் தந்தை கவிஞர் எழிலிறைவன் எழுதிய நூலை வெளிக்கொண்டு வருகிறார். இதனை பாபாசாகேப் அம்பேத்கர் சுலை இலக்கியச் சங்கம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
-முனைவர் க. ஜெயபாலன்
Be the first to rate this book.