காட்சிகளின்றி வாழ்க்கை ஒரு போதும் நிறம் பெறுவதில்லை. காட்சிகளை வெறுமனே கடந்து போகிறவர்களுக்கு வாழ்வியலின் வேர் புரியாது. வாழ்க்கையில் தான் எத்தனை. எத்தனை காட்சிகள். அழுகை, சிரிப்பு. காதல் என்ற கதாபாத்திரங்களில் எத்தனை விதமான பச்சையங்கள் பதிந்து போகின்றன. முதல் காட்சிகளை ஒரு போதும் மனம் மறப்பதில்லை. அங்கே தான் மனம் கூடி கட்டிக்கொள்கிறது. அங்கிருந்து தான் மன உலகம் வாழ்க்கையை தேடி பயணிக்கிறது. இந்த முதல் காட்சிகளைப் பொறுத்தே வாழ்க்கையின் அழகியல் வரையப்படுகிறது. சுவைப்படுகிறது. இக்காட்சிகளை இயன்ற மட்டும் பத்திரப்படுத்தி அங்கே பாதங்களை இளைப்பாறுதலுக்காக அவ்வப்போது படுக்க வைப்பதுண்டு. திசை தெரியாமல் ஆரம்பித்த வாழ்க்கைக்கு திசைக்கொடுக்க ஒவ்வொருவருக்கும் முதல் காட்சிகளே முகவரியாக அமைகின்றன.. கடந்து வந்த பாதைகளில் பூக்கள் மட்டுமே கொய்திருக்கவில்லை...ஆனால் பூக்களின் காலமாகவே அவைகள் இருந்திருக்கின்றன என்பதை இப்போது முள்கள் குத்தும் போது தான் புரிய முடிகிறது.
முதல் காட்சிகள் முக்கியமான வாழ்க்கைக்காட்சிகள்.
Be the first to rate this book.