இப்பூவுலகின் நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடுதான் என்றாலும் உலகின் 11.4 % தாவரங்களுக்கு இது வாழ்விடம். இருந்தாலும், தாவரங்களை நாம் கவனிப்பதில்லை என்று நூலாசிரியர் அங்கலாய்க்கின்றார். செடி கொடிகளைக் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையை 'தாவரக்குருடு என்று கூறுகின்றார். ஒரு வேளை தாவரங்கள் ஒரே இட த்தில் நிலைத்து இருப்பதால் நாம் அவற்றைக் கவனிப் பதில்லையோ? இங்கு மனதில் கொள்ள வேண்டியது 'காட்டுயிர்' என்ற சொல், விலங்கு களையும் தாவரங்களையும் குறிக்கின்றது.
இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு சிறப்பு அம்ச மான சந்தனம் பற்றி ஆழமான ஒரு கட்டுரை இந்நூலில் உள்ளது. அதே போன்றதுதான் மருதாணி, வெட்டிவேர், தர்ப்பை பற்றிய கட்டுரைகளும். அன்றாட வாழ்வில் இவை நமக்கு நெருக்கமாக இருந்தாலும் அறிவியல் பூர்வமாக இந்தத் தாவரங்களைப் பற்றி நாம் அறிந்திருப்பது சொற்பமே.
தாவரயியல் பேராசிரியராக இருப்பதனால் அறிவியல் அடிப்படையில் எழுதுகின்றார். ஆதாரமில்லாமல் எதையும் கூறுவதில்லை. திடமான மேற்கோள்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ் அறிவியல் எழுத்துலகிற்கு இந்நூல் ஒரு நல்ல வரவு.
-தியடோர் பாஸ்கரன்
Be the first to rate this book.