முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

1 rating(s)
275 ₹290 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: ஆந்திரேயி மக்கீன்
Translator: எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி
Publisher: காலச்சுவடு
No. of pages: 200
Add to cart
QR Code
Source : The Life of an Unknown Man (English)

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789386820433
Published on: 2017
Book Format: Paperback

Description

வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இருவர் ஒரு நாள் இரவு ரஷ்யாவில், செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், சந்திக்கின்றனர். ஒருவன், ஷுட்டோவ். அவன் பாரிஸுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவன். பல ஆண்டுகள் கழித்து தன் தாய் நாட்டுக்கு வந்திருப்பவன். இன்னொருவன் வோல்ஸ்கி. அவன் இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் (பழைய பெயர்: லெனின்கிராட்) முற்றுகை இடப்பட்டபோதும், பின்னர் ஸ்டாலின் ‘அரசியல் தூய்மைப்படுத்துதல் (Great Purge) கொள்கை’யை அமுல் படுத்தியபோதும், சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டு தன் துணிவையும், மனித நேயத்தையும் நிலைநாட்டியவன். இந்தச் சந்திப்பின்போது, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு முன்னும் பின் னும், ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்ப்படுகின்றன. அதே சமயம், நிலையான - உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்ற சிந்தனைக் கோட்பாடும் வெள்ளிடை மலையாக இந்நாவலில் வெளிப்படுகிறது.

ஆந்திரேயி மக்கீன் (பி. 1957)

ஆந்திரேயி மக்கீன் (Andreï Makine) 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி சைபீரியாவில் பிறந்தார். தாய் மொழி ரஷ்ய மொழியாக இருப்பினும், சிறு வயதிலிருந்தே பிரெஞ்சு மொழியில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். 1987 ஆண்டு ’ஆசிரியர் பரிமாற்றத் திட்டம்’ ஒன்றின்கீழ் பிரான்சுக்கு வந்தவர் அங்கேயே தங்கி பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுவிட்டார். அவர் தன் இயற்பெயரிலும், கப்ரியேல் ஓஸ்மோந்த் (Gabriel Osmonde) என்னும் புனை பெயரிலும் 15 நாவல்கள் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார். மேலும் படைப்புகள் வெளிவரவிருக்கின்றன. இவருடைய நாவல்கள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கின்றன. ஜாஃப்ரே ஸ்ட்ரேச்சென் என்பவர் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பிரான்சில் மிக உயரிய இலக்கிய விருதுகளாகிய கோங்கூர் (Prix Goncourt) விருதையும், மெதிஸிஸ் (Prix Médicis) விருதையும் பெற்றிருக்கிறார். இவருடைய படைப்புகளில் பிரெஞ்சு-ரஷ்ய பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி உலக அமைதிக்கு விழைகின்ற நோக்கமும் வெளிப்படுவது சிறப்பாகும்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
1
4
0
3
0
2
0
1
0

5

இன்னும் எத்தனை முறை என் வாழ்க்கையில் இந்த புத்தகத்தை படிக்க போகிறேன் என்று தெரியவில்லை.. Life long companion...

Surendran R 19-01-2020 10:56 am
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp