முன்நகர்வு
நிதீஷ் கிருஷ்ணா
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் இவரது சொந்த ஊர். பெங்களூர் கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். கல்லூரி நாட்களில், 'பேசும் நூல்' என்கிற யூடியூப் சேனலைத் தொடங்கி புத்தக வாசிப்பு அனுபவங்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார். அதே பெயரில் வலைதளத்தையும் தொடங்கி இவரது ஆரம்பகாலச் சிறுகதைகளை எழுதி அதில் வெளியிட்டிருக்கிறார்.
'An Angel's Story' இவரது முதல் நாவல். 2021ஆம் ஆண்டில் வெளியானது. அதன்பின் ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து அமேசான் கிண்டிலில், வாசகனின் எழுத்து' என்கிற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். Notion press வெளியீடாக 2023ஆம் ஆண்டில், காதல் எனும் கனவுவெளி' குறுநாவல் வெளியானது. எழுத்தாளர் ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின், 'The Library of Mabel Mogaburu' என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, 'எலிஸாவின் நூலகம்' எனும் குறும்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார். மேலும் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின், 'Home Burial' எனும் கவிதையை அடிப்படையாகக் கொண்டு, 'இடைவெளி' எனும் குறும்படத்தை எடுத்திருக்கிறார்.தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
Be the first to rate this book.