“ஈண்டுச் செல்லும் மக்காள், நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர், நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்!” என்று ஸ்பார்ட்டானிய மாவீரன் ஒருவன் கூறிக்கொண்டே களத்தில் மடிந்ததாக அவன் மாண்ட இடத்தில் நடப்பட்டுள்ள கல்வெட்டின் வீர வரிகளை எண்ணிக் கொண்டே நாங்கள் போர்க்களம் சென்றோம். அந்த வீரன் தன் பணியை முடித்துப் படுத்ததாக நடு கல்லிலே எழுதப்பட்டதாக வரலாறு முழங்குகிறது. ஆனால் கல்லக்குடிப் போராட்டத்திலே நாங்கள் படுத்துப், ‘பணி’ முடிக்கச் சென்றோம். கல்லக்குடி வெற்றி விழாவின்போது நான் தலை வைத்துப் படுத்திருந்த அந்தத் தண்டவாளத்தைச் சென்று பார்த்தேன். அன்று படையின் முதல்வனாகச் சென்றேன், போலீசார் புடைசூழ. இன்று தமிழக முதல்வனாகச் சென்றேன், அதே போலீசார் புடைசூழ!
Be the first to rate this book.