தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக அறியப்பட்ட 'முள்ளெலிகள்' உலகெங்கும் பரந்துள்ளன. தென்னக முள்ளெலிகளில் ஒன்று 1851இல் ஆய்வாளர் ஒருவரால் கண்டறியப்பட்டு, மற்ற முள்ளெலிகளிடம் வேறுபட்டு, தமிழ்நாட்டில் மிகுதியாக வாழும் முள்ளெலிக்கு 'சென்னை முள்ளெலி' என்று பெயர்வைத்தார்கள்.
1940-களில் உலகெங்கும் பரவிய 'கக்குவான் இருமல் சுவாசத்தொற்று, தமிழ்நாட்டில் பரவியபோது, சென்னை முள்ளெலி 'இருமல் எலி'யான வரலாற்றை சூழலியல் பார்வையுடன் அணுகுகிறது இந்நூல். நாட்டுப்புறங்களில் உயிர்வேலி, மேய்ச்சல் நிலம், குறுங்காடு, குன்றுகள், பாறைச் சிதைவுகள் போன்ற இடங்களில் வாழ்ந்த முள்ளெலிகள் பெருகும் பூச்சிகளை, சிற்றுயிர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் உயிரினத் தொகுதியில் ஒன்றாக இருந்தன.
-சமவெளி சூழல் மண்டலத்தில் அற்றும் அருகியும் வரும் முள்ளெலிகளை கவனப்படுத்தி, அவைகளின் சூழல் இருப்பை, இயற்கை வரலாற்றை கவித்துவத்தோடும், அறிவியல் உள்ளீடுகளோடும் கட்டமைக்கப்பட்ட இந்நூல், உயிரின வரலாற்றைப் பேசும் நூல்களில் முதன்மையானது. அறிவியல் சார்ந்தும், அறவியல் சார்ந்தும் வாசிக்க விரும்புவோருக்கு இதுவொரு புதையல்.
Be the first to rate this book.