படைப்புலகில் தடம்பதித்த அறிஞர் பெருமக்களின் சுவடுகளைப் பின்பற்றிய எழுதுகோல்... என்னைப் பற்றிக்கொண்டதன் விளைவே, முள்கூடு எனும் இக்கவிதை நூல்.
கனவுகளைத் தொலைத்து கனத்துப்போன இமைகளோடு... நிஜத்தில் நிழலாடும் நினைவலைகளைச் சுமந்தபடி கடமைகளால் கட்டமைக்கப்பட்ட பெண் சமூகத்தின் மனக்குமுறல்களுக்கு, எழுத்துவடிவம் தர முயன்றிருக்கிறேன்.
நிலவில் வளம் தேடும் விஞ்ஞானம் ஒருபுறம்... மனிதக்கழிவை, குடிநீரில் கலக்கும் அவலம் மறுபுறம்.
யாவருக்குமான இப்பூவுலகில், காற்றில் கலந்த நஞ்சாய் இன்றுவரை சாதி.
ஏற்றத்தாழ்வுகளற்ற புதிய உலகம் படைக்க விரும்பும் அத்தனை கரங்களோடும் இந்நூலின் வழி நானும் கைகோர்க்கிறேன்.
-முனைவர் செ. இரா. வசந்தமணி
Be the first to rate this book.