பெரும்பாலும் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு நேரடியான தீர்வு அளிக்கும் விதமாகவே பெரியவர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். அப்படிச் செய்யாமல், பிரச்னைகளின் தன்மையை அறிந்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதற்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அதிகரிக்கும். இந்தப் புத்தகம் இத்தகைய நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகள் எளிதில் புரிந்துகொண்டு செயல்படும் விதமாக உரையாடல் வடிவில் இக்கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மதுரையைச் சேர்ந்தவர். இளங்கலை ஆங்கிலம், முதுகலை ஆற்றுப்படுத்தல் மற்றும் உள சிகிச்சை பயின்றவர். சில ஆண்டுகள் மருத்துவமனையிலும் சொந்த மையத்திலும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சியளித்தவர். ஆசிரியராகவும் பணியாற்றியவர். சென்னை, ஆந்திரா, அமெரிக்கா ஆகிய இடங்களில் வசித்தவர். குழந்தைகளைச் சந்தித்து கதைகள் சொல்லி அவர்களுடன் உரையாடுவது இவரின் பொழுதுபோக்கு. இவர் எழுதிய 'மாலு ஷாலுவின் பயணம்' நூல், ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Be the first to rate this book.