ஆண் மேலாதிக்கச் சமுதாயத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட முறைமைகளின் ஊடாக அதிகாரத்தையும் அதற்கான தலைமைத்துவத்தையும் ஆண்களே பெற்றுக்கொள்கின்றனர். குடும்பவியல், வீடு, பொதுவாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற எல்லாவற்றிலும் இதன் ஆளுகை பரவிச் செல்கின்றது.
குடும்பத்தில், சமூகத்தில் ஒரு பெண்ணின் வகிபாகம் என்ன என்பதையும் ஆணாதிக்கச் சமுதாயமே தீர்மானிக்கின்றது. உலகின் பல பாகங்களில் ஆண்களை விடப் பெண்களே கூடுதலான நேரம் வேலை செய்கின்றனர் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. அவற்றுள் பல, ஊதியம் பெறப்படாத வேலைகள், வீட்டு வேலைகள், பிள்ளை பராமரிப்பு மற்றும் இவற்றோடு தொடர்பான வேலைகள் பல உள்ளன. ஊதியம் அற்ற வேலைகளில் ஆண்களை விடப் பெண்கள் இரு மடங்கு, அல்லது பல மடங்கு வேலை செய்கின்ற பல சமூகங்கள் உள்ளன.
Be the first to rate this book.