வானம் ஒளித்து வைத்திருக்கும்
எல்லா வழிகளையும்
உலகுக்கு காட்டிவிடுகின்றன
பறவைகள் தங்களின் இறகுதிர்ப்பால்.
கோயிலுக்கு இப்போதுதான்
யாரோ ஒரு காது கேளாத
வாய் பேசமுடியாதவர்
பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்
சைகைகளில் பேசிக்கொண்டிருக்கின்றன
சிலைகள் எல்லாம்.
Be the first to rate this book.