முடிதிருத்துனர் தொழிற் சங்கம் எனும் முல்க்ராஜ் ஆனந்தின் சிறந்த சிறுகதையை தலைப்பாக கொண்ட இத்தொகுப்பில் மாணிக் பந்தோபாத்யா, முன்ஷி பிரேம்சந்த, மாகாஸ்வேதா தேவி மற்றும் மஞ்சு கபூர் ஆகிய ஐந்து காலம் வியக்கும் அற்புத எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவை இந்திய சமூகக்கட்டமைப்பின் இன்னொரு பக்கத்தை நமக்கு தோலுரித்து காட்டுகின்றன. உங்கள் மனசாட்சியை உலுக்கும் இந்த கதைகளை மொழி பெயர்த்து தந்திருப்பதன் மூலம் தமிழ்ச் சூழலுக்கு வளம் சேர்த்திருக்கிறார் மொழி பெயர்ப்பாளர் கி.ரமேஷ்
மத்திய அரசு ஊழியரான இவர் மொழிப்பெயர்ப்பு ஆர்வலரும் கூட சுமார் இதுவரை 45 புத்தகங்கள் எழுதவும், மொழிப்பெயர்ப்பும் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதவும், மொழிப்பெயர்க்கவும் செய்துள்ளார்.
நோபல் பரிசுப்பெற்ற அமெரிக்க நாவலான ஜான் ஸ்டீன்பெக்கின் 'Grapes of Wrath' ஐ தமிழில் 'கோபத்தின் கனிகள்' என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக தஞ்சாவூர் இலக்கியப் பேரவையின் மொழிப்பெயர்ப்பு விருது பெற்றுள்ளார். மேலும் இவருக்கு தொழிற்சங்கவாதி. அகில இந்திய கணக்குத் தணிக்கை ஊழியர் சங்கத்தின் தலைவர் என பல்வேறு அடையாளங்களும் உண்டு.
Be the first to rate this book.