வாழ்க்கையில் மழலைப் பருவம் மகிழ்ச்சியுடன் கூடியது. இளமைப் பருவம் நண்பர்களுடன் கழிப்பது. வாலிபப் பருவத்தில் நமக்கெனக் குடும்பத்தை அமைத்துக் கொடுப்பார்கள். பின்னர், நமக்கென குடும்பப் பொறுப்புகள் கூடும். அடுத்த தலைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையையும் கவனித்துக்கொள்ள வேண்டிவரும். நம் கண்முன்னே நம் மழலையையும், பெற்றோர்களாக முதியவர்களையும் காணும் இக்காலக் கட்டத்தில்தான் வாழ்க்கை தன் புதிர்களை அவிழ்த்துவிடும். இரண்டு தலைமுறைக்கும் இடையில் இடைவெளிதான் எவ்வளவு? இதைச் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள்.
பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும், பெற்றோர்கள் தங்கள் முதுமைக் காலத்தில் கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் இப்புத்தகம் ஆழமான வழிகாட்டலை வழங்குகிறது.
நாற்பத்தெட்டு ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர். பணிவான ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிப் பல்கலைக்கழக அளவுவரை உயர்ந்தவர். இரண்டு முனைவர் பட்டங்களும் நான்கு முதுகலைப் பட்டங்களும் பெற்றவர். 1997-98 ஆம் ஆண்டில் NCERT விருதையும் பெற்றவர்.
தேசிய அளவிலான கல்வி ஆராய்ச்சிக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கல்வி சார்ந்து எழுதியுள்ள ஒன்பது புத்தகங்களை அமேசான் இணையத்தின் மூலம் பெற முடியும். அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி ஊக்கப்படுத்தியவர். தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் பி.எ மற்றும் எம்.எட் படிப்புகளுக்குப் பத்து வருடங்களுக்கு மேலாகக் கருத்தாளாராகப் பணியாற்றியுள்ளார். கல்வியியல் கல்லூரி ஒன்றில் முதல்வராகவும். ஆராய்ச்சி இயக்குநராகவும் ஐந்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரான இவர், பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது சிறந்த கவிஞராகப் புதுவை அரசினால் பட்டயம் அளிக்கப்பட்டவர். தினமணி, முதுமை எனும் பூங்காற்று. எல்டர்ஸ் தமிழ்நாடு முதியோர் சங்க மாத இதழ், கல்கி மற்றும் விகடகவி டிஜிடல் வார இதழ் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிவருவதுடன் தொலைக்காட்சி, கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
Be the first to rate this book.