மார்க்சைப் பொறுத்தவரையிலும், கம்யூனிசம் என்பது 'குறைகளற்ற முழு நிறைவான முதலாளியம்' என்பதாக இருக்க முடியாது.
அப்படியிருக்க, ஏன் பலரும் அதைப் பார்க்கத் தவறுகின்றனர்? அந்தத் தவறு முதலாளியத்தைப் பற்றிய மார்க்சின் ஆழமான விமர்சனத்தை உட்கிரகித்துக் கொள்ள முடியாத தவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. தனியுடைமையும் சந்தையும் இருப்பதால் மட்டுமே முதலாளியத்தை அவர் எதிர்க்கவில்லை (இந்த இரண்டும் முதலாளியத்திற்கு முன்பே நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன).அல்லது 'அராஜகமாக' இருப்பதாலும் மத்தியப்படுத்தப்பட்ட திட்டமிடல் இல்லாததாலும் மட்டுமே அவர் முதலாளியத்தை எதிர்க்கவில்லை (பல எதேச்சதிகார சமூகங்கள் திட்டமிடலைக் கொண்டிருந்தன). அவர் முதலாளியத்தை எதிர்த்ததற்குக் காரணம் இது ஒரு வக்கிரமான சமூகம். இதில் மனித உறவுகள் 'பொருள்களுக்கு இடையிலான உறவுகள்' என்ற வடிவத்தை எடுத்துள்ளன என்பதுதான். மனித உறவுகள் 'பொருள்களுக்கு இடையிலான உறவுகள் வடிவத்தை எடுக்கக் காரணம் மதிப்பு உற்பத்தியின் ஆதிக்கம் இருப்பதுதான் வாழும் தனி மனிதர்கள், அவர்கள் உருவாக்கும் பொருள்களுடைய ஆதிக்கத்தின் அருவமான வடிவங்களுக்கு அடிமைப்படுதல் தான்.
Be the first to rate this book.