இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல. சமமற்று கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்திய இட ஒதுக்கீட்டு நாயகர் வி.பி.சிங்....!
சூப்பர் கிளீன் என்று இந்திய அரசியலில் புனிதமாக அலங்கரிக்கப்பட்டவரும் இவரே..! திராவிட சமூக நீதியை உயர்த்திப் பிடித்த இந்திய அரசியலின் அதிசய மனிதராக விளங்கிய இவர். இந்திய நிலப்பரப்பில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும். மத்திய அரசு பணியில் இட ஒதுக்கீடு பெற்று தந்த ஒளி விளக்கு ஆவார்...
27% இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்காக இந்திய பிரதமர் பதவியை பறிகொடுத்த இரும்பு மனிதர் இவர்.
மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை, தமிழகத்திற்கு தவப்புதல்வராக இருந்து உதவிய நேசமிக்க தலைவர் வி.பி.சிங்...!
அரசியல் மற்றும் சமூக வாழ்வில் வி .பி .சிங் செய்த பங்களிப்புகள் ஏராளம். ஊழலை தேசிய பிரச்சனையாக கூண்டில் ஏற்றி அம்பலப்படுத்தினார். அவரது அரசாங்கம் ஒரே நேரத்தில் பாஜகவின் ஆதரவை பெற்றாலும், வி.பி. சிங் தனது மதச்சார்பற்ற நம்பிக்கைகளை ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. இதற்காக அவர் கொடுத்த விலை பதவிக்கவிழ்ப்பு.
பார்ப்பன ஊடகங்களால் முழுமையாக வெறுக்கப்பட்ட ஒரு தலைவர் என்பது தான் வி.பி.சிங்கின் உண்மையான தொண்டுக்கு கிடைத்த மகுடம்.
நன்றியுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடிமகனும் இந்த மாமனிதனின் நன்றி எதிர்பாராத என்றென்றும் தலை வணங்குவர்...!
Be the first to rate this book.