சுலபத் தவணையில் சிங்காசனத்தில் அமரச்செய்யும் சில்லரைத் தனமான மொழி அரசியல் மோசடி இந்தியாவில் பல்லாண்டு காலமாகவே பல்லாக்கு ஏறிவருகிறது..!
தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையான வரலாறு. அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது..
மொழியை அரணாகப்பயன்படுத்தினால் மரபு. பண்பாடு, இலக்கியச் செல்வம் மிகும். அரசியலாக தீப்பந்தம் ஏந்தி நிற்கும் போது. வர்ணஜால வான வேடிக்கையே மிகும்.
அமிழ்த மொழி நந்தவனத்தின் நறுமணமும் தென்றலும் அடையாளம் இழந்து தீப்பற்றி எரியச் செய்யும் வன்மம் தினந்தோறும் நடைபெறுகிறது..!
பூரிப்படையத்தக்க தொன்மைக்கு பழைய உலோகச் சட்டையை மாற்றி இழிவு படுத்த முயற்சிக்கிறார்கள் சிலர்.
கூவும் மொழிச் சந்தை அரசியல் குவியலில், நம் தமிழை ஏலம் எடுக்க கால் எடுக்க நாம் நிற்கும் சூழலுக்கு உடன்பிறந்த அன்னியரே நம்மை தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்..!
Be the first to rate this book.