விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர் கல்கி. திருச்சி சிறையில் ஒருமுறை கைதியாக இருந்தார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை. கல்கிக்கு திருச்சி சிறையில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.
சிறைச்சாலையில் தன்னுடன் கைதியாக இருந்த ராஜாஜி, டி. எஸ். எஸ். ராஜன், தஞ்சாவூர் நாடிமுத்து பிள்ளை, க. சந்தானம் போன்ற மிகப் பெரிய காங்கிரஸ்காரர்களைப் பற்றிய கல்கியின் குறிப்புகள் முக்கியமானவை.
திருச்சி சிறைச்சாலை காந்தியவாதிகளின் இலக்கிய முகாமாக இருந்திருக்கிறது. சிறைத் துயரத்தை ஓர் ஆனந்தக் கூத்தாக பதிவு செய்திருக்கும் ஒரே நூல் இதுவாகத்தான் இருக்க முடியும்.
Be the first to rate this book.