இந்த ‘மூக்கு நீண்ட குருவி’ நூலில் உள்ள பெரும்பாலான கதைகள்,சிறுவர்களின் மனமகிழ்ச்சியை,மரங்களின் அவசியத்தை,சுற்றுப்புற சுகாதாரத்தை,நல்லொழுக்கத்தை,விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன.இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது.
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.