மோனிகா செய்த பொம்மை’ நூலில் மொத்தம் பத்து கதைகள் இருக்கின்றன. இந்தக் கதைகளில் சில சிறார் சிற்றிதழிலும் தி இந்து - மாயாபஜார் நாளிதழிலும் வெளிவந்தவை. பல்வேறு வாசகர்களை சென்றடைந்தவை. ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நமக்குள்ளும் கதைச்சிறகுகள் முளைக்கின்றன. நமக்குப் பிடித்த அந்தக் கதை நம் நண்பர்களுக்குச் சொல்வதற்கு வழி செய்கின்றன. ஒவ்வொரு தலைப்பை படித்தவுடன் அந்தக் கதையை உடனே வாசிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகின்றன. வாசிக்கும் பழக்கத்தை சிறுவர்கள் மேற்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தக் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.
Be the first to rate this book.