'மித்ராவின் காத்தாடி' என்னும் இந்தத் தொகுப்பு சிறுவர்கள் உலகை சீராட்ட வருகிறது. பிச்சிப் பூ பறக்கவிடும் இந்தக் 'காத்தாடி' ஒரு வசந்த வானத்தை உருவாக்கி, நம்மையும் அதற்குள் சிறகடிக்க வைக்கிறது. எப்போதோ பால்யத்தைக் கடந்தவர்களையும் கூட இந்தக் கதைத் தொகுப்பு குழந்தைப் பருவத்துக்குக் கொண்டு செல்வது இதன் கூடுதல் பலம். இலக்கிய உலகில், புதுப்பாய்ச்சலைத் தொடங்கியிருக்கும் எழுத்தாளர் பிச்சிப் பூவுக்கு, உரிய உயரிய மகுடத்தைக் காலம் விரைவில் சூட்டும்.
Be the first to rate this book.