யாரோ ஒருத்தியின் கடிதம்' 'ராஜ விளையாட்டு' போன்ற உலகப் புகழ்பெற்ற நூல்களின் ஆசிரியரான ஸ்டெஃபான் ஸ்வெய்க் - கின் குறுநாவல் இது. மௌனப்பட காலத்திலிருந்து இன்று வரை இவரது கதைகளைப் பயன்படுத்தி முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வந்திருக்கின்றன. இன்னும் வரும். அதிலும் சில கதைகள் பலமுறை திரைப்படமாக்கப் பட்டிருக்கின்றன. அவரது கதைகளில் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள், குண வார்ப்புகள் துல்லியமாய் படம் பிடிக்கப் பட்டிருப்பதை அவரது எழுத்தை வாசிப்பவர்கள் கண்டுணர முடியும். 'மிருக மனம்' குறுநாவலும் கதாசிரியராய், உளவியளாராய் அவர் பெற்றிருந்த மேதைமையும், அவர் மறைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் பெருகிக் கொண்டிருக்கும் அவரது புகழுக்கான காரணத்தையும் உணர்த்தும்.
Be the first to rate this book.