ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு. இந்தப் பிரபஞ்சத்தை அறிவதில் பேரார்வம் கொண்ட ஆயிஷா என்னும் கதாபாத்திரம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. அவர்களது அறிவியல் வேட்கையை ஊக்கப்படுத்தியிருக்கிறது. மின்மினி என்ற இந்தக் கதையில் கணிதத்தையும் ஃபேன்டசியையும் ஒருசேரப் பயணிக்க வைக்கிறார் நடராசன். ஆகவே இது ஓர் அழகிய அறிவியல் புனைகதையாகப் பரிணமிக்கிறது.
Be the first to rate this book.