அவர்கள் செல்வதை எக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிரிந்தபோது ஒரு வேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வாள்யாப் பயல், சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்து சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டான். அவ்வளவுதான்.ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன்பாதம் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் கரீரென்று பாய்ந்தது போலத் துடிதுடித்துப் போனேன். சடக்கென்று முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டேன். போரில் தலை நரைத்துப் போன இந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல, விழித்திருக்கும் காலத்திலும் தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பாள் திருப்பிக் கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது. வறண்டு காய்ந்து போன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணீர் ஓர் ஆண்மகனின் கன்னங்களில் வழிவதைக் குழந்தை காணாதவாறு மறைப்பது. அதன் பிஞ்சு மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பது தான் உண்மையிலேயே முக்கியமானதாகும்.
-மிகயீல் ஷோலகவ்
Be the first to rate this book.