கதைகளின் பக்கங்கள் தீராதவை. அவை இன்னும் பலவாறு விரிந்துகொண்டே கிளைகளைப் பரப்புகின்றன. கிளைகளின்மீது அமர்ந்துகொண்ட சிறுபறவையாய் இப்போது நானும், கதைச் சிறகுகளைப் படபடத்துக்கொண்டு பறக்கவே ஆசைப்படுகிறேன்; பறக்கவும் செய்கிறேன். எழுதுதலில் என் வேலைகளை எப்போதும் மிச்சமாக்கிவிடுகிறார்கள் கதை மாந்தர்கள். நான் அவர்களுக்கு வெறும் கருவி மட்டும்தான். அவர்கள் தங்களைத் தாங்களே வரைந்துகொள்கிறார்கள். காலம் கடந்த ஓட்டத்தில் கதையின் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் முழுப் பங்களிப்பும் கதையின் மாந்தர்களுக்கானது. புனைவுக்கும் அப்பால் சிறு புன்னகையோடு இந்த அழகிய வாழ்வை அர்த்தப்படுத்துபவர்கள் அவர்கள்தான் என்பது என் நம்பிக்கை. பற்றியெரிந்த என் மனவெளிப் பக்கங்களின் கதைக் காடுகளில் மிச்சமிருந்த தேறிய கங்குகளை இத்தொகுப்பு சேகரித்துக்கொண்டது.
Be the first to rate this book.