குழந்தைகள் உலகத்துக்குள் சிரம் தாழ்த்தி நாம் சென்றுவிட்டால், மகிழ்வுடன் நம்மை அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் காணும், வியக்கும் விசயங்களை மகிழ்வுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
வளர வளர நாம்தான் நம்முள் இருக்கும் குழந்தைத் தன்மையை மறந்து, ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம் கடிவாளத்தைப் பிடித்து நிறுத்த முடியவில்லை நம்மால்! ஆனால், கன்னிக்கோவில் இராஜாவுக்கு அது இயல்பாக வருகிறது. குழந்தைகள் உலகத்தில் பட்டாம்பூச்சி போல் பயணப்பட்டு, கதைகளை அள்ளிக்கொண்டு வருகிறார்.
-கதைசொல்லி தாமரைச்செல்வி, பெங்களூரு.
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.