சாத்திரியின் கதைகளில் சுய எள்ளலும் நையாண்டியும் தொனிக்கும் எளிய மொழியினூடே, இன்றைய அவசர உலகின் பரபரப்புகளுக்கு நடுவே பன்முகமான களங்களில் அன்றாடம் உலாவரும் சராசரி மனிதர்கள். அவர்களின் வாழ்வியல் சிக்கல்கள், அவர்களின் குணவியல்புகள், நடத்தைக் கோலங்களை வெற்றுப் பாசாங்குகள், போலிப் பூச்சுகளுக்கு அப்பால், உள்ளது உள்ளவாறே நம்மால் தரிசிக்க முடிகிறது. ஆக மொத்தத்தில், நமது சமூகங்களில் காலங்காலமாகக் கட்டமைத்துப் பாதுகாக்கப்பட்டு வரும் போலித்தனமான வெற்றுப் புனிதங்களைக் கட்டுடைக்கும் எழுத்தியக்கமாக சாத்திரியின் இந்தச் சிறுகதைத் தொகுதியினை அடையாளப்படுத்தலாம்.
- லறீனா அப்துல் ஹக்
Be the first to rate this book.