கலைஞர் தனக்கு மீசை முளைத்த வயதில் எழுதிய இந்த அழகோவியங்கள் இந்த இலக்கிய வடிவில் இதற்கு முன் எவரும் செய்திராத சோதனை முயற்சியாகும்.தமிழின வரலாற்றில் பண்பாட்டில் தோய்ந்து ஆய்ந்த அறிவும் ஒரு படைப்பாளிக்கான குழந்தை போன்ற குழந்தை மனமும் மொழியை சிற்பமாய் செதுக்கும் செய்திறனும் நினைத்துப்பார்க்க முடியாத கற்பனைகளின் நீள அகலங்ளும் இப்படைப்புக்குள் காணக்காண அத்தனை சிறிய வயதில் இத்தனை பேராற்றலா என்று வியப்பூறுகிறது.தமிழின் ஒலிச்சுவை மொழிச்சுவை பொருட்சுவை விழைவோரெல்லாம் இந்நூலை வாய்விட்டு வாசித்தாலும் செவிவழி மாந்தலும் தமிழுக்கும் தமிழர்க்கும் நலன் பயக்கும்.
Be the first to rate this book.