கவிதை, நாவல், சிறுகதை என தமிழ்ப்பரப்பில் கால் நூற்றாண்டுகட்கு மேலாக எழுதி வருபவர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம். 'இத்தினியூண்டு நக்கக் கிடைத்தால் போதும். அப்போதே முடிந்துவிடும் இந்தியனின் புரட்சி': என்பார் குஞ்ஞுண்ணி. நல்லவேளை, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அப்படியில்லை. பிரதிபலன் பார்க்காமல் கவிதையில் தொடர்ந்து இயங்கி வரும் ஆளுமை. இடதுசாரி மனமும் நாட்டார் வழக்காற்றுக் குணமும் கூடியவை ஞானதிரவியத்தின் கவிதைகள். எழுதிக் கனிந்த விரல்களால் வாழ்வின் மாபெரும் சிக்கல்களையும் எளிமையாக்கி எழுத்தில் கடத்துபவர். ஞானதிரவியம் போன்றோர் கிடைத்தற்கரிய படைப்பாளிகள். ஆழமான வேரை உறைபனி சேர்வதில்லை. காலம் வலிமையானவர்களையும் அப்படித்தான் தன் ஆழத்தில் வைத்துப் பாதுகாக்கிறது. போரில் உடைந்த வாள்கள் புதுப்பிக்கப்படும். சாம்பலிலிருந்து தீ எழும். கிரீடமற்றவர்கள் தம் அரியணையில் அமர்வார்கள். ஆம், ஞானதிரவியத்தின் வெற்றி என்பது அவரது கவிதையின் வெற்றி. 'மீனுடன் நின்ற கடவுள்' கவிதை இயலில் ஞானதிரவியத்தின் இருப்பை மீண்டுமொருமுறை உறுதிசெய்கிற தொகுப்பு.
-கரிகாலன்
Be the first to rate this book.