நண்பன் ஒருவன் பிரிந்து போவது பற்றி, உன்னை விட்டுப் பின்னோக்கி ஓடும் தைரியம் எனக்கு இல்லை; உன்னால் இயலுமானால் நீ என்னைக் கடந்து போகலாம் என்கிறார்.
கூண்டுப் பறவையே என்னும் கவிதையில், பறவைக்குக் கூறுவது போன்றுச் சிந்தனை விடுதலை வேண்டும் என்பதை, "வாழ்க்கைப் போர்க்களத்தில் வாள் இல்லை; சிந்தனைச் செழிப்பு தான் மிகவும் அவசியம். உன் சிந்தனையைச் சிறைப்படுத்தியவர்களைச் சிந்தித்து வந்து சந்தி" என்று சிந்திக்க வைக்கிறார். பொய்யும் உண்மையும் என்னும் கவிதையில், பொய் உண்மையை விட்டு வெகு தூரம் கடந்து வந்து விட்ட நிலையில், உண்மை நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பதை அறிந்து பதறும் பொய்க்கு, மற்றொரு பொய் 'பதறாதே அங்கு இருப்பதும் நம்மாள்தான்' என்று கூறுவதாதாகப் படைத்துள்ளார். இது இன்றைய உலகில் உண்மையின் நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு படித்து இன்புறும் வகையில் மட்டும் அமையாது, நம்மைச் சுயமாகச் சிந்திக்கவும் வைக்கும் இக்கவிதைகள் நம்மில் புதியதொரு விடுதலைப்போரை நடத்துவனவாக அமைந்துள்ளன.
Be the first to rate this book.