பேரங்காடிக்குள் நுழையும் சிறுமி தன் கரங்கள் நிறைய கண்கவர் மிட்டாய்களை அள்ளி வருவதைப் போன்ற கவிதைகள் நிரம்பிய தொகுப்பு இது கவிதைகள் தன்னை எழுதிக் கொண்ட மொழி தித்திக்கிறது. முதல் தொகுப்பு என்று சொல்ல முடியாதபடி கவிதைகள் மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிறந்த ஊருக்கும் தனக்குமான இடைவெளியைக் கவிதைகளால் நிரப்புகிறது இத்தொகுப்பு. தேர்ந்த நடை நிதானமான மொழி, குறைந்தச் சொற்கள் எனத் தனக்கெனப் பதிய கவிதை வெளியைக் கட்டமைத்திருக்கும் அஜிதா புவனசந்திரனுக்கு வாழ்த்துக்கள்! பார்க்குமிடமெங்கிலும் கவிஞர்கள் சூழ்ந்திருக்கும் இவக்கியவுலகில் போலச் செய்யாத. நீண்ட வாசிப்பனுபவம் கொண்ட கவிதை எழுதத் தெரிந்த ஒரு புதிய கவிஞரின் வரவிற்காக அகமகிழ்கிறேன்.
-எஸ்தர் ராணி
Be the first to rate this book.