'மலர்களை விற்று அதைவிட உயர்ந்ததாய் வேறெதை வாங்கப் போகிறீர்கள்?'
என்று கேட்ட கவிஞரின் ஆதங்கக் குரலை இக்கவிதை இன்னும் நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறது.
'மரத்தடிக் கடவுள் வணங்கும்போது கிளை அசைக்கிறது மரம்.
ஆகா.. அப்படியே சொக்கிப்போனேன். என்னே.. காட்சியழகு! சபாஷ்.. புன்னகை பூ கவிஞரே..! தேம்பித் தேம்பி குழந்தை அழுகையில் ஒருமுறை சிரிக்கும் கடவுளும், குளத்தில் விழுந்த நிலவைக் கலைக்கும் மழைத்துளியும், நாய்க்கும் செடிக்குமாகச் சேர்ந்தே பேசும் குட்டியப்பனின் அம்மாவும், அதிகாலைக் கூந்தலைப் பொன்னிறமாக்கும் சரக்கொன்றை மலர்களும்.. தமிழ் ஹைக்கூ தொட்டிருக்கும் உயரத்தை அளப்பதற்கான அளவீட்டுக் கவிதைகளாக அர்த்தம் பொதிந்து ஒளிர்கின்றன. இக்கவிதைகளுக்காகவே கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரைப் பாராட்டிக் கொண்டாட வேண்டும்.
- மு.முருகேஷ்
Be the first to rate this book.