இன்றைய நவீன கவிதைகளின் உலகம் பல்வேறு வகைகளில் திசை திருப்பப்பட்டு சிதறடிக்கப்பட்டு நான் லீனியர் அல்லது பாலிப்போனிக் என்கிற வகையில் ஒரு உலகளாவிய தன்மையைப் பெற்று வருகின்றன. எதிர் கவிதைகள் எழுதப்பட்டு வரும் காலமும் இது. ஆனால் மனிதர்கள் மொழியைத் தங்கள் பிராந்தியங்களில் ஏதோ ஒரு வகையில் உரையாடலாக மாற்றிக் கொண்டு தன் இருப்பின் அடையாளத்தையும் ஒருசேரப்பேணிக் கொள்கிறார்கள். இந்தத் தொகுப்பின் முழு கவிதைகளையும் ஒருவர் வாசிக்கும் போது உண்டாகும் தர்க்கங்களை விட அனைத்தும் குறுக்கிட்டு வழிமறிக்கும் இந்த வாழ்க்கையில் நாம் அதிகாலையில் பார்த்து விட்டு செல்லும் ஒரு மலர்ச் செடியை போல கண் மறைத்து வானத்தில் மழை வருமா என்று பார்ப்பது போல
ரயில் பயணத்தில்
வலதுபுறமே இடதாகவும்
இடதுபுறமே வலமாகவும்
நகர்கிறது
கனவுக்கும் நிஜத்துக்கும்
இடையே தான் இருக்கிறது
வாழ்க்கை.
- யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.