பூமியின் கவிதை மழை. மழைத்துளிகள் நம் மேல் விழும்போது நம் உடலில் மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கின்றன. மழை கொட்டத் தொடங்கியதும் மரத்தடிக்குச் சென்று ஒதுங்கும் வேளையில், சட்டென அருகில் வந்து ஒட்டிக்கொள்ளும் நபரை திருப்பிப் பார்க்கிறோம். அவரிடம் நம் அப்பாவின் சாயல் தெரிகிறது. கடந்த காலங்கள் சட்டென கிளைத்து கண நேரம் நம்மை ஆட்கொள்கின்றன. நாம் செய்த தவறுகள், கோபங்கள், சண்டைகள். ஏமாற்றங்கள். விட்டுப்போன காதலிகள், கஷ்ட காலத்தில் உதவாத நண்பர்கள், மனைவியின் சிடுசிடுப்பு. பேருந்தில் நொடியில் கைவிட்டு நகரும் காமம் என அனைத்தும் ஞாபகத்துக்கு வருகின்றன. இந்தக் கதைகள் இது போலத்தான். இதில் வரும் வெவ்வேறு மனிதர்களின் உணர்வுகள் உங்களை கொஞ்சம் ஈரப்படுத்தும் அல்லது முழுவதுமாய் நனையவும் வைக்கும். நனைந்து பாருங்கள்.
-அஜயன் பாலா,
நாதன் பதிப்பகம்
Be the first to rate this book.