சமூகத்தின் கூட்டு நினைவுகளிலிருந்தும் அரசின் பதிவேடுகளிலிருந்தும் வேலைக்களங்களிலிருந்தும் இயக்கங்களிலிருந்தும் குடும்பத்திலிருந்தும், தனது சொந்த மனதில் இருந்துமே காணாமல் போய்விட்டவர்கள், போக்கடிக்கப்பட்டவர்கள் பற்றிய கதைகள் இவை.
சமூகம், மக்கள் என்றெல்லாம் சொல்லும்போது இவர்களையெல்லாம் உள்ளடக்கித்தான் சொல்கிறோமா என்கிற கேள்வியை நமக்குள் எழச்செய்யுமளவுக்கு, நமது நினைவுக்குள் வராதவர்களே கதைமாந்தர்கள்.
இனிமேலும் இப்படித்தான் இருக்கப்போகிறது இந்த வாழ்க்கை என்றான பிறகு அதன் அபத்தங்களை எத்தி விளையாடும் சேட்டைக்காரனே இத்தொகுப்பின் கதைசொல்லி.
- ஆதவன் தீட்சண்யா
Be the first to rate this book.