காலச் சாயல்கள், மூங்கில் கண்ணாடி தொகுதிகளைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக கவிஞர் இரா. மீனாட்சி எழுதிய கவிதைகள் 'மயில்கண் என்னும் தலைப்பில் இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. கவிதை வாசிப்பு என்பது கவிதையில் அடுக்கப்பட்டிருக்கும் சொற்களை மட்டும் வாசிப்பதல்ல. மரத்தை அண்ணாந்து பார்க்கும்போது மரக் கிளைகளின் ஊடே மின்னித் தெரியும் நீல வானத்தையும் மேகத்தையும் வெளிச்சத்தையும் சேர்த்துப் பார்ப்பதுபோல், சொற்களுக்கிடையில் அமைந்திருக்கும் மௌனத்தையும் காட்சிகளையும் வாசித்து அறிய வேண்டிய கலை. அத்தகும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட இத்தொகுதி நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் விருந்தாக அமையும்.
- பாவண்ணன்
Be the first to rate this book.